கச்சத்தீவு திருவிழாவில் இந்திய யாத்ரீகர்களுக்கு இடமில்லை! தமிழகத்தின் நிலைப்பாடு?(Photos)
கச்சத்தீவில் வருடந்தோறும் நடைபெறும் அந்தோணியார் திருவிழாவில் இலங்கை யாத்ரீகர்களும் இந்திய யாத்தீரீகர்களும் பங்கேற்று வந்த நிலையில் இந்த தடவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கச்சத்தீவு புனித அந்தோணியாரின் திருநாளைக் குறிக்கும் வகையில், வருடாந்த சமயக் கொண்டாட்டங்களில் கோவிட் நிலைமை காரணமாக இந்த ஆண்டு இந்திய யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கே.மகேசன் தலைமையில் யாழ்ப்பாண ஆயர் ஆர்.டி. அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், சுகாதார அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
தனை யாழ்ப்பாண மாவட்ட செயலர் க் மகேசன் எமது செய்திச்சேவையிடம் உறுதிப்படுத்தினார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில், மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள இந்திய யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று க. மகேசன் தெரிவித்தார்.
இந்தநிலையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மறைமாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 500 உள்ளூர் பக்தர்கள், இரண்டு அளவுகள் மற்றும் பூஸ்டரைப் பெற்றதற்கான தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பித்தால், நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதேவேளை கொவிட்-19 பரவுவதை தடுப்பதற்காக கடுமையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருவதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எஸ்.சத்தியசோதி தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்திய யாத்ரீகர்கள், கச்சத்தீவு நிகழ்வில் பங்கேற்பதைத் தடுக்கும் முடிவிற்கு ராமேஸ்வரம் மோட்டார் படகு சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு, கச்சத்தீவு திருவிழா கொண்டாடப்பட்டபோது அதில் 3,000 இந்திய யாத்ரீகர்களும் 7,000 இலங்கை யாத்ரீகர்களும் பங்கேற்றனர்.
இலங்கையின் நெடுந்தீவுக்கும் இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்துள்ள கச்சத்தீவு, 1976ஆம் ஆண்டு இந்தியாவினால் இலங்கைக்கு , அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியினால் கையளிக்கப்பட்டது.
அதுவரையான காலப்பகுதியில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள், தமது மீன்பிடி வலைகளை உலர்த்தும் இடமாக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதையடுத்து, கச்சதீவை இந்தியா மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழகத்தில் கோசங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.







மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
