ஊடகத் தணிக்கை எதுவும் இல்லை! - அரசாங்கம் அறிவிப்பு
தற்போதுள்ள கோவிட் நிலைமை தொடர்பில் ஊடகத் தணிக்கை எதுவும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதில் சுகாதார அதிகாரிகள் கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை குறித்து, அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் உண்மையான கோவிட் காட்சியை மறைக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.
எனினும் தற்போதுள்ள கள நிலைமை குறித்து பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல், சுகாதார அதிகாரிகள் பொறுப்புடன் அறிக்கைகளை வழங்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில சுகாதார அதிகாரிகளின் வெவ்வேறு அறிக்கைகளால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி....
கோவிட் பற்றி மருத்துவர்கள் ஊடகங்களிடம் பேச தடை

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
