இளம் அரசியல் பிரபலத்திற்கு பிரதமர் பதவி: நாமல் உறுதிப்படுத்திய விடயம்
நாட்டின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு முன்னதாக பொருளாதார அரசியல் ஸ்திரமான நிலைமை உருவாக்கப்படுவதே பிரதான தேவையாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்படப்போவதாக வெளியான தகவல்கள் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சுப்பதவியை எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பத்திரிகை ஒன்றிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எரிபொருட்கள் உள்ளிட்டவை இலகுவாக பெற்றுக்கொள்வதில் அசௌகரியமான நிலைமைகள் உள்ளன.
இந்தப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வினை காண வேண்டியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை சுமுகமாகப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.
அந்த விடயத்திற்கே முதற்தானம் வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். இவ்விதமானபொருளாதார நெருக்கடியை அடுத்து அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்த நிலைமைகளும் சீர் செய்யப்பட வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் அமைச்சரவையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். அச்செயற்பாட்டினை ஜனாதிபதி விரைந்து முன்னெடுக்கவுள்ளார். அதேநேரம், தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும், 20ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு 19ஆவது திருத்தச்சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் அரசியல் கட்சிகளிடத்திலிருந்து தோற்றம் பெற்றிருக்கின்றன.
முதலில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படாதும் அரசியல் ஸ்திரமான நிலைமையொன்று ஏற்படாதும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் பற்றி பேசுவதால் பயனில்லை.
அவ்விதமான கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பதானதுரூபவ் நெருக்கடிகளுக்குள் தமது சுயநலன்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகும்.
ஆகவே எதிர்க்கட்சிகளில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கோரிக்கைகள் அக்கட்சிகளின் சுயஇலாப நோக்கமுடையவை. அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேநேரம், விரைவில் பொருளாதார நிலைமைகளை மீளவும் கட்டமைப்பதோது அரசியல் நிலைமைகளும் சுமூகமாக்கப்படும். ஜனாதிபதி அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.
என்னைப்பொறுத்தவரையில் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video



