சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்ட கதவடைப்புக்கு ஆதரவு இல்லை: வர்த்தகர் சங்கம் தீர்மானம்
இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை(18) சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கதவடைப்புக்கு ஆதரவு வழங்க முடியாது என காத்தான்குடி வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு- முத்தையன் கட்டில் இராணுவத்தினரின் தாக்குதலால் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் கடந்த (15) ஆம் திகதி கதவடைப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இளைஞன் உயிரிழப்பு
பின்னர் மடுமாதா தேவாலய திருவிழா காரணமாக குறித்த திகதி மாற்றப்பட்டு 18ஆம் திகதி நடைபெறும் என அறிக்கப்பட்டுள்ளது.
இளைஞன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் துரிதமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஏன் இப்படி கதவடைப்பு என்ற கேள்வி எழுகின்றது.
ஆதரவு இல்லை
தமிழரசுக் கட்சியில் உள்ள ஒரு சாரருக்கும், பல தமிழ் அமைப்புக்களுக்கும் இந்த கதவடைப்பு தொடர்பாக ஒத்த கருத்தை காணவில்லை. அவர்கள் ஒற்றுமை இல்லாத போது முஸ்லிம் அரசியல்வாதிகள் இதற்கு ஆதரவு வழங்கக் கூடாது.மௌனமான இருப்பதே முஸ்லிம் சமூகத்திற்கு நல்லது.

இந்த விபரங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பகுதிகளில் உள்ள எவரும் கதவடைப்புக்கு ஆதரவு இல்லை. வழமை போன்று கடைகள் திறக்கப்படும் - என்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam