இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனினும் நாட்டின் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுமுறை நாட்களாக இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக பல நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோகம்
தற்போது எரிபொருள் பற்றாக்குறை இல்லை எனவும் வழமை போன்று எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இல்லை என்று அறிவிப்பு பலகைகள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் சில பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் தங்கள் வாகனங்களுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எனினும் இன்றையதினம் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமை போன்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam