கொரோனா சடலங்களில் இருந்து வைரஸ் பரவும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை!
கொரோனாவினால் மரணமாவோரின் உடலங்களை அடக்கம் செய்தால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவ கல்லூரி ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (College of Community Physicians of Sri Lanka) இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய வழிகாட்டுதல்களின்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கல்லூரி குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவிய சூழ்நிலை என்பதால், தொற்றுநோயின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கட்டாய விதியை ஏற்றுக்கொண்டதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி கூறியுள்ளது.
எனினும் அடுத்தடுத்த சான்றுகளின் அடிப்படையில் அந்த ஏற்றுக்கொள்ளலை மறுபரிசீலனை செய்ய தாம் தூண்டப்பட்டதாக கல்லூரி தெரிவித்துள்ளது.
கொரோனா தொடர்பில் உலகில் 85,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் இலக்கியங்கள் வெளியாகியுள்ளன.
எனினும் கொரோனாவினால் இறந்த உடலத்தின் வழியாக வைரஸ் பரவுவதாக எந்த ஒரு பதிவும் வெளியாகவில்லை என்றும் கல்லூரி தெரிவித்துள்ளது.
2020 மே மாதத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் இரண்டு தடயவியல் மருத்துவ வல்லுநர்கள், கொரோனா உடலங்களில் இருந்து நோய்ப்பரவல் ஏற்படுவதாக கூறினார்கள்.
எனினும் பின்னர் ஆசிரியர்களால் ஒரு பிழை என்று தெரிவிக்கப்பட்டது.
நிலத்தடி நீர் வழியாக நேரடியாக நோய் பரவுகின்ற கூற்றுக்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும், குடிநீர் மூலம் வைரஸ் பரவக்கூடும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.
உலக சுகாதார மையம் மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை கொரோனாவினால் மரணித்தவர்களின் உடலங்களை கையாள்வது குறித்த தெளிவான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன என்றும் இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
