முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட சேவைகள்
முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் நேற்று (29) சிறுதுநேரம் வெளிநோயாளர் பிரிவின் வைத்திய சேவைகள் தடைப்பட்டிருந்தன.
இந்நிலையில், இதுகுறித்து பொதுமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரன் உதவியுடன் பிறிதொரு வைத்தியரை வைத்திய சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.
வைத்திய சேவை
இதன்போது வைத்தியசாலைக்கு சென்றிருந்த துரைராசா ரவிகரன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், "மருத்துவத் தேவைப்பாடுகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த தேவைப்பாடுகள் தொடர்பாக என்னிடம் ஏற்கனவே தெரியப்படுத்தியிருக்கின்றார். முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலை மாத்திரமல்லாது, முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த தேவைப்பாடுகள் கு6றித்து ஏற்கனவே எம்மால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் முறைப்பாடு
இந்நிலையில், தற்போது, முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வைத்தியர்கள் எவருமில்லை. அத்தோடு வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வந்த பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் என்னிடம் முறையிடப்பட்டிருந்தது.

அதற்கமைய இது தொடர்பில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் இதுகுறித்து தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தேன். இந்நிலையில் தாம் உடனடியாகப் பிறிதொரு வைத்தியரை கடமையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு ஆதாரவைத்தியசாலைக்கு நேரடியாகவருகைதந்து நிலமைகளைப் பார்வையிட்டிருந்தேன்.
இங்கு பிறிதொரு வைத்தியர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வைத்திய சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. இங்கு நிலவும் மருத்துவத் தேவைகள், வைத்திய ஆளணிப் பற்றாக்குறைகள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan