சுகாதார அமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை: கையொப்பமிட்ட சஜித்
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்று (20.07.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் தரமற்ற மருந்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
கையொப்பமிட்ட முக்கிய உறுப்பினர்கள்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ராஜித சேனாரத்ன, சந்திம வீரக்கொடி, ரஞ்சித் மத்தும பண்டார, லக்ச்மன் கிரியெல்ல மற்றும் ஹேவா வித்னகே ஆகியோர் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
மேலும் நம்பிக்கையில்லா பிரேரணையில் லக்ஷ்மன் கிரில்ல, ரஞ்சித் மத்தும பண்டார, டொக்டர் ராஜித சேனாரத்ன போன்ற கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தமாக கையொப்பமிட்டுள்ளனர்.
ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தமது கட்சி சார்பில் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார்.
பிரேரணை மீதான தனது நிலைப்பாட்டை இன்னும் தீர்மானிக்கவில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை டலஸ் அழகப்பெரும தலைமையிலான எதிர்க்கட்சி குழுவும் பிரேரணைக்கு ஆதரவளிக்கும்
என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |