பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க முடியாது
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தில் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மான ஆவணம் உரிய முறையில் அமையப் பெறவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த யோசனை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தர்ப்பம் கோரிய போதிலும் அதற்கு சபாநாயகர் அனுமதிக்காத காரணத்தினால் அவையில் அமளி துமளி நிலை உருவானது.