உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசாங்கத்திற்கு சாதகமான உடன்படிக்கை - திலான் பெரேரா
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசாங்கத்திற்குச் சாதகமான உடன்படிக்கை என்று எதிர்க்கட்சி ஒப்புக் கொண்டுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா இன்று தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவும் இதனை அரசாங்கத்திற்குச் சாதகமான ஒரு பிரேரணை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், எதிர்க்கட்சியின் தோல்வியை மட்டுமே நிரூபித்தது என்று கூறியுள்ளதாக என்று திலான் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் பிளவுகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. தயாசிறி ஜெயசேகர, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச போன்ற அரசாங்க பிரிவுகளில் விரிசல்கள் இருப்பதாக அந்தக் கட்சி நினைத்தது.
எனினும் அரசாங்கக் குழுக்கள் இன்னும் பலமடைந்து பிரேரணையைத் தோற்கடித்தன என்றும் திலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri