சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று கையளிப்பு
சபாநாயகர் ஜகத் விக்ரமரட்னவிற்கு எதிராக எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்றைய தினம் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கை நேற்றைய தினம் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
சபாநாயகருக்கு எதிரான 49 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் இந்த பிரேரணையில் கையொப்பமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் சுமத்தி வரும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிா்கொள்ளத் தயார் என ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.