சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மாற்றம்
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (19) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை எதிர்வரும் 21ஆம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட நிறைவேற்றம் மற்றும் பொலிஸ் மா அதிபர் நியமனம் ஆகிய சந்தர்ப்பங்களில் சபாநாயகர் பக்கச் சார்பாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு எதிர்க்கட்சிகளினால் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |