நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மணிப்பூர் வன்முறைகளின் எதிரொலி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று (26.07.2023) நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான அறிக்கையை காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகள் வழங்கி உள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவிக்கும்படி கோரியே, எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்துள்ளன.
அரசுக்கு பெரும்பான்மை பலம்
குறித்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் விரைவில் அது குறித்து விவாதிக்கப்படும் எனவும் மேலும், அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதல்களில் 130க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மோடி அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசுக்கு எதிராக தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் 28வது நம்பிக்கையில்லா தீர்மானமாகும். இதற்கு முன்பு மக்களவையில் 27 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
