எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று காலை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான தரமான நிலக்கரியைப் போதியளவு கொள்வனவு செய்யத் தவறியதன் மூலம், நாட்டின் முக்கிய எரிசக்தி சொத்தைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அமைச்சர் தவறியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு மேலாளராகப் பணியாற்றிய காலத்தில் ஊழல் புரிந்ததாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு அமைச்சராக இருப்பதற்கான தார்மீகப் பொறுப்பை மீறுவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, இன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை தற்போதைய உலகளாவிய ரீதியிலான போர் மற்றும் பொருளாதாரச் சூழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதம் நாளை (20) தொடரும் என்றும், அதில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைப்பார் என நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri