நாடாளுமன்றில் கையொப்பமிடப்பட்ட கெஹலியவுக்கு எதிரான பிரேரணை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
இதில் பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அதில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகியவை அடங்குகின்றன.
சுகாதாரத்துறையில் நெருக்கடி
தற்போது எதிர்க்கட்சியில் சுயேச்சையாகச் செயற்படும் உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோரும் யோசனையில் கையொப்பமிட்டுள்ளனர்.
தற்போது சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இதுவரை தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமைக்காக, கேள்விப்பத்திர முறையிலிருந்து விலகி, மருந்துகளை இறக்குமதி செய்தமைக்காக, சுகாதார அமைச்சர் என்ற வகையில் ரம்புக்வெல்ல பொறுப்புக்கூற வேண்டியவர் என்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான சுகாதாரச் சேவை
மக்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பான சுகாதாரச் சேவையைப் பாழாக்கும் வகையில் அமைச்சர் செயல்பட்டுள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பின் 28ஆவது பிரிவின்படி அமைச்சர் தனது அடிப்படைக் கடமைகளை புறக்கணித்துள்ளார் என்றும் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் யோசனையை விவாதிப்பதற்கான திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
