ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை! நாமலின் நிலைப்பாடு
கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்கும் என்று அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
கட்சியின் நிலைப்பாடு
நாட்டின் கல்விக் கட்டமைப்பு மேலும் சீர்குலைய இடமளிக்க முடியாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் நாமல் ராஜபக்ச எம்.பி. கூறினார்.

கல்வித்துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டே இந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி முறைமையைப் பாதுகாக்கும் நோக்கில் பொறுப்புடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது நாட்டின் நலனுக்காகவே என்றும் நாமல் ராஜபக்ச எம்.பி. மேலும் தெரிவித்தார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri