ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : தயார் நிலையில் அரசாங்கம்
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு உட்படுத்த ஆளும் கட்சி தயாராக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், எதிர்க்கட்சிகள் அதற்குத் தயாராக இல்லை என்றால், கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை அடுத்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தலாம்.
எதிர்க்கட்சி விவாதிக்கத் தயாராக இல்லை
எனினும், இந்த விடயம் குறித்து தனது கருத்தை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த முடிவை ஆளும் கட்சி அல்ல, எதிர்க்கட்சியே எடுக்க வேண்டும் என்றும், அரசாங்கம் கூறுவது போல் எதிர்க்கட்சி அதை விவாதிக்கத் தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஜனவரி 13 ஆம் திகதி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri