அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் 4ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதுவரையில் சுமார் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
11 கட்சிகளின் குழு மற்றும் ஆளும் கட்சியிலிருந்து சுயாதீனமாக இயங்கும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடுமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேவையான கையொப்பங்களுடன் எதிர்வரும் மே மாதம் 4ம் திகதிக்கு முன்னதாக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அசோக் அபேசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri