அமெரிக்காவுடன் சமரசம் கிடையாது: பாகிஸ்தான் இராணுவத் தளபதியிடம் ஈரான் திட்டவட்டம்!
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களது தேசிய உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று ஈரானின் முதன்மை பேச்சுவார்த்தையாளரும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் காலிபாஃப், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த போர்ச் சூழலைத் தொடர்ந்து, தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 'ஹோர்முஸ் நீரிணை' கடல்வழிப் போக்குவரத்து பெரும்பாலான கப்பல்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதனால் உலகளாவிய எரிசக்தி சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், பதற்றத்தைத் தணிப்பதற்காக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் பிராந்திய மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உயர் மட்டச் சந்திப்பு தெஹ்ரானில் இன்று(23.5.2026) நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
இந்தச் சந்திப்பின் போது பேசிய சபாநாயகர் காலிபாஃப், அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஒரு நேர்மையான தரப்பாக நடந்துகொள்ளவில்லை என்றும், சிறிதும் நாணயமற்ற ஒரு தரப்பை ஈரான் ஒருபோதும் நம்பாது என்றும் சாடினார்.
இராஜதந்திர ரீதியாகவும், போர்க்களத்திலும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க ஈரான் உறுதியுடன் செயல்படும் எனக் குறிப்பிட்ட அவர், தற்காலிகப் போர்நிறுத்தக் காலத்தில் ஈரானிய ஆயுதப் படைகள் தங்களது ஆற்றலை மேலும் பலப்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்கா மீண்டும் முட்டாள்தனமாகப் போரைத் தொடங்கினால் அதன் விளைவுகள் மிகக் கொடூரமானதாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.

முன்னதாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
ஈரான் முன்வைத்துள்ள 14 அம்ச ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நகர்ந்து வரும் வேளையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் இன்னும் ஆழமாகவே இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் சிறு முன்னேற்றம்; பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஈரான் விஜயம்
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam