யாழில் பாண் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது:யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாண் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது என யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.
450 கிராம் பாண் ஒன்றின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாண்
விற்பனை விலை தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
பத்து ரூபாவினால் விலை குறைப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பாணின் விற்பனை விலை 250 ரூபா வரை விற்கப்படுகிறது.
அதனால் அவர்கள் பத்து ரூபாய் குறைத்து தற்போது விற்பனை செய்வதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் நாங்கள் யாழ்
மாவட்டத்தில் ஏற்கனவே பாணை 200 ரூபாய்க்கு விற்கும் போது அதிலிருந்து பத்து
ரூபாய் குறைப்பது என்பது முடியாத காரியம் ஆகும். ஆகவே இதனை பொதுமக்கள்
விளங்கிக் கொள்ள வேண்டும்."என கூறியுள்ளார்.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri