பிரதமர் பதவியில் மாற்றம் இல்லை! தெளிவுப்படுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தி
அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் குறித்த ஊகங்களை அமைச்சர் கே.டி.லால்காந்த நிராகரித்துள்ளார்.
அத்தகைய கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்றும், அது போன்ற தகவல்களை பரப்புபவர்களின் மூளைகள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இது குறித்து நேற்று கருத்துரைத்த அவர், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ளக மோதல்
அத்துடன், அரசாங்கத்துக்குள் எந்த உள்ளக மோதல்களும் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் கட்சியின் விரிவாக்கம் முடிந்து, கொழும்பு மாநகராட்சியின் கட்டுப்பாட்டை அது பெற்றுள்ளது.
இதன்படி தேசிய மக்கள் சக்தியின் வ்ரே கெலி பால்தசார் (Vraie Cally Balthazaar) ஏற்கனவே மாநகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதனை அதிகாரப்பூர்வமாக்குவது மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாக லால் காந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
