கொவிட் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லை!கெஹெலிய
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக தற்போதைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என இணை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நான்கு பேர் கொண்ட குழுவின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
மேலும் கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவுவதற்கான எந்தவிதமான சாதகமான நிலைமையும் இல்லை எனவும், ஐ.நா மனித உரிமை பேரவையின் குழு கூறியுள்ளமை தொடர்பில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து தொடர்ந்து விடயங்களை தெளிவுப்படுத்திய அமைச்சர்,
சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிமுறைகளை அரசாங்கம் தொடர்ந்தும் பின்பற்றி வருவதாக கூறியுள்ளார்.
இந்த வழிமுறைகளில் விலகிச் சென்றால் நாட்டில் ஏற்படும் ஆபத்துக்களுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டிய நிலைமை ஏற்படும். ஒரு சாதாரண நபராக மருத்துவத் துறையைப் பற்றி எந்த அறிவும் தனக்கு இல்லை எனவும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் சுகாதார துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் தீர்மானங்களின் படியே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri