ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம் கிடையாது: இஸ்ரேல் அறிவிப்பு
வொஷிங்டனில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில், ஹிஸ்புல்லா அமைப்புடன் எவ்விதப் போர் நிறுத்த உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதுவர் எகியேல் லைட்டர் கூறுகையில், லெபனான் அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஆனால் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இஸ்ரேலுடனான இத்தகைய நேரடிப் பேச்சுவார்த்தை லெபனான் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், இது உள்நாட்டுப் பிரிவினையை அதிகப்படுத்தும் என்றும் ஹிஸ்புல்லா ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் ஃபழ்லுல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தாலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

சனிக்கிழமை அன்று நபதியே (Nabatieh) மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூன்று அவசர கால மீட்புப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டு மீட்புப் பணியாளர்களைக் குறிவைப்பதாக லெபனான் குற்றம் சாட்டியுள்ளது.
தாக்குதல்கள்
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்துமாறு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகமும் லெபனான் அரசாங்கமும் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்வது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தத்தைப் பாதிக்கக்கூடும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri