24 மணித்தியாலங்களில் 200 இலக்குகள்! மிக மோசமான தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல்
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் அதேவேளையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் லெபனானில் உள்ள சுமார் 200 ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
லெபனானின் தெற்குப் பகுதியில் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஆதரவாக இந்த வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வான்வழித் தாக்குதல்கள்
குறிப்பாக, இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஏவுதளங்களை அழிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மறுபுறம், இஸ்ரேலின் வடக்குப் பகுதியான மேல் கலிலி பிராந்தியத்தில் அடையாளம் தெரியாத விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் பதற்றமான சூழலில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், லெபனான் எல்லைப்பகுதியில் போர் மேகங்கள் இன்னும் விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri