கம்போடியாவுடன் போர் நிறுத்தம் ஏற்படவில்லை! தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு
கம்போடியாவுடன் இன்னும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன்,தாம் தொலைபேசியில் பேசியதாகவும், அண்டை நாடான கம்போடியாவுடனான மோதலில் தமது நாடு ஆக்கிரமிப்பாளர் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது, ஜூலை மாதம் முதலில் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் திரும்ப வேண்டும் என்று டிரம்ப் தன்னிடம் கூறியதாக அனுடின் தெரிவித்துள்ளார்.
வர்த்தக வரிகள் பயன்பாடு
எனினும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக வர்த்தக வரிகள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான எல்லை மோதல்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்த நிலையில் அனுடினின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தும் கம்போடியாவும் தங்கள் சர்ச்சைக்குரிய 817 கிலோமீற்றர் (508-மைல்) எல்லையின் பல இடங்களில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வார மோதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர், 260 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.