முல்லைத்தீவில் உறவுகளை நினைவு கூருவதற்கு தடை இல்லை - நீதிமன்றம் தீர்ப்பு (Photos)

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Magistrate Court Maaveerar Naal
By Shan Nov 27, 2023 10:54 AM GMT
Report

முல்லைத்தீவில் உறவுகளை நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மாவீரர் நிகழ்வுகளுக்கு தடைகளை விதிப்பதற்கு எதிராக கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இன்று (27.11.2023) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நீதிமன்ற கட்டளை

இன்றையதினம் (27.11.2023) முல்லைத்தீவு நீதவானால் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக 24.11.2023 அன்று வழங்கப்பட்ட இடைக்கால கட்டளை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

முல்லைத்தீவில் உறவுகளை நினைவு கூருவதற்கு தடை இல்லை - நீதிமன்றம் தீர்ப்பு (Photos) | No Barriers For Reminiscing Relations

குறித்த கட்டைளையை ஒவ்வொரு நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், ஒவ்வொரு விதமாக கூறி பொதுமக்களின் மாவீரர் நிகழ்வு செயற்பாட்டுகளுக்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.

மாவீரர் நிகழ்வு செயற்பாடுகளுக்கு பொலிஸார் பல்வேறு தடைகளை விதிக்கின்றார்கள் என கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் எல்லா வழக்குகளிலும் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்தோம்.

இதனை ஏற்ற மன்று, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் இறந்த ஆன்மாக்களை நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என தெளிவான கட்டளை ஒன்றை வழங்கியிருக்கின்றது. 

உறவுகளை நினைவு கூருதல்

மேலும், எம்மால் கூறப்பட்டவாறு கார்த்திகை பூவினை இறந்தவர்களின் நினைவிடத்தில் பாவிப்பதற்கும், சிவப்பு மஞ்சள் கொடிகளை பாவிப்பதற்கும், சோக இசைகளுக்காக ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் மற்றும் மாவீரர் எனும் வசனம் பாவிக்காது துயிலும் இல்லம் எனும் பதாதையை வைக்கவும் மன்று அனுமதி வழங்கியிருக்கின்றது.

முல்லைத்தீவில் உறவுகளை நினைவு கூருவதற்கு தடை இல்லை - நீதிமன்றம் தீர்ப்பு (Photos) | No Barriers For Reminiscing Relations

இது உண்மையில் இறந்தவர்களின் உறவுகளுக்கு நல்ல செய்தி என்பதுடன் அவர்கள் தங்களுடைய உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளையாகும்.

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பலர் என்னுடன் இணைந்து வழக்கில் முன்னிலையாகி இருந்தார்கள்.

இந்த வழக்கில் யாருக்கு எதிராக கட்டளை வழங்கப்பட்டதோ அவர்கள் இங்கே முன்னிலையாகி இந்த வழக்கிற்கான தீர்ப்பினை பெற்றுக் கொண்டோம்  என தெரிவித்துள்ளார்.

19 வருடங்களின் பின்னர் யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தின வளைவு (video)

19 வருடங்களின் பின்னர் யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தின வளைவு (video)

கிளிநொச்சியில் பிணையில் வெளிவந்த நபர் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் பிணையில் வெளிவந்த நபர் சடலமாக மீட்பு

இராணுவ முகாம் முன்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்வு (Photos)

இராணுவ முகாம் முன்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்வு (Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US