உள்ளூராட்சித் தேர்தலில் அநுர அலை வீசாது! திட்டவட்டமாக கூறும் சுமந்திரன்
நாடு சம்பந்தமாக மக்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கலாம், இது ஊர் சம்பந்தமான தேர்தல் என்பதால் உள்ளூராட்சித் தேர்தலில் அநுர அலை வீசாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின்(Itak) யாழ்ப்பாண தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்றையதினம்(11) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கொழும்பில் தமிழரசுக் கட்சி போட்டியிடவில்லை என்று எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் அநுர அலையிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.
ஏனென்றால் உள்ளூர் தேர்தல், அதனைதான் நாங்கள் மக்களுக்கு நினைவூட்டுகின்றோம், இது ஊர் தேர்தல். தங்களுடைய நிர்வாகங்களை தாங்களே கவனிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
