கொழும்பில் வளி மாசடையவில்லை! ஆய்வில் வெளியான தகவல்
தலைநகர் கொழும்பில் வளி மாசடையவில்லை என விஞ்ஞான ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் வளியில் ஒட்சிசனின் அளவு சடுதியாக வீழ்ச்சிப் போக்கினை பதிவு செய்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் குறித்து ஆராயுமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் கோரியிருந்தார்.
வளி மாசடைதல் குறித்து ஆராய்ந்த விசேட குழு இன்றைய தினம் அதன் அறிக்கையை அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.
கொழும்பு நகரில் ஒட்சிசனின் அளவு குறையவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அதிகளவு சனத்தொகை காணப்பட்டாலும் ஒட்சிசனின் அளவு வீழ்ச்சியடையக்கூடிய சாத்தியமில்லை எனவும் காலநிலை காரணிகளின் அடிப்படையில் வளியின் தரம் மாறுபடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
