முஸ்லிம் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைந்து விட்டது
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முற்றாக சிதைந்து விட்டது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியபப்ர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சிதைவடைந்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித கவலையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதற்கான உண்மையான பிரதிபலன்களை எதிர்காலத்தில் அரசாங்கம் முகம் கொடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கல்முனை நகரின் உட் கட்டமைப்பு, கடல் அரிப்பு வடிகால் அமைப்பு அபிவிருத்திக்காக குறைந்த பட்சம் 65,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த அரசாங்கம் கல்முனையை ஏனைய 18 நகரங்களுடன் இணைத்து 5000 மில்லியன் ரூபாவை பகிர்ந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது கல்முனை மக்களுக்கு இழைக்கப்பட்டமை மிகவு அநியாயமான செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகரசபை மற்றும் சாய்ந்தமருது நகரசபைக்கான தேர்தலுக்கு தாங்கள் தயார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam