நிஷாந்த உலுகேதென்னவுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் இன்று (24.09.2025) உலுகேதென்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிஷாந்த உலுகேதென்ன
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன கடமையாற்றிய காலத்தில் குருணாகல் - பொத்துஹெர பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், அவர் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



