எம்பிக்கள் Taare Zameen Par திரைப்படம் பார்க்க வேண்டும்.. அமைச்சர் பரிந்துரை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிவுட் திரைப்படமான தாரே ஜமீன் பர்ரினை திரையிட வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும், "சட்டங்கள் காலப்போக்கில் உருவாக வேண்டும், குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி அங்கீகரிக்கத் தவறியுள்ளது.
முக்கிய திரைப்படம்..
அனைத்து எம்.பி.க்களுக்கும் பொலிவுட் திரைப்படமான தாரே ஜமீன் பர்ரினை திரையிட வேண்டும் , குறிப்பாக அக்கறை கொண்டவர்களுக்கு தனிப்பட்ட பிரதிகள் வழங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அமிர் கான் இயக்கிய 2007ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படமான தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த்), கற்றல் சிரமங்கள் காரணமாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து தண்டனை மற்றும் தவறான புரிதலை எதிர்கொள்ளும் டிஸ்லெக்ஸியா நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனின் போராட்டங்களை ஆராய்கிறது.
குழந்தைப் பருவ சவால்களை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பரவலாகப் பாராட்டப்பட்ட இந்தத் திரைப்படம், தெற்காசியா முழுவதும் கல்வி மற்றும் கொள்கை விவாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் சூழல்கள் மற்றும் ஒழுக்க முறைகளில் சீர்திருத்தங்களை ஆதரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



