மகிந்த கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை நியமிப்பது தொடர்பில் கட்சி அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை நடத்தியது.
குறித்த யோசனை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் பிரவேசம்
இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் ஆசியும் கிடைத்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என சட்டத்தரணி சாமரி பெரேரா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri