மக்களின் எதிர்பார்ப்புகளை புறக்கணிக்கிறதா அநுர அரசாங்கம்..! நிர்மால் ரஞ்சித் தேவசிறி விமர்சனம்
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பொதுமக்களின ஆணைக்கு மாறுப்பாடுகள் செய்து கொண்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தத்துவாசிரியர்களில் ஒருவரான நிர்மால் ரஞ்சித் தேவசிறி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தற்போதைய அரசாங்கத்தினுள் தேசிய மக்கள் சக்தி எனப்படும் பரந்த முன்னணியின் பலம் படிப்படியாகக் குறைந்து வரும் அதே சமயம், அதற்குள் ஜே.வி.பி.யின் பலம் வலுப்பெற்று வருகின்றது.
தற்போதைய அரசாங்கம் ஒரு சாதாரண பாரம்பரிய அரசாங்கத்தின் வடிவத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.
பாரம்பரிய அரசியல் முறைக்குள் சிக்கிய அநுர அரசு
ஆட்சி என்பது எளிதான காரியம் அல்ல, அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்டம் அதைக் குறைத்து மதிப்பிடுகிறது.

குறிப்பாக மதம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பார்க்கும்போது, அரசாங்கம் தற்போதுள்ள பிற்போக்கு சக்திகளுடன் கைகோர்க்கும் ஒரு சூழல் காணப்படுகிறது. மக்கள் வழங்கிய ஆணையின் தீவிரத்தன்மைக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை.
அரசாங்கத்தில் ஒருவித பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், அது தற்போதுள்ள பாரம்பரிய அரசியல் கட்டமைப்பிற்குள் சிக்கிக்கொண்டு வருவதைப்போன்ற தன்மை மேலோங்கியுள்ளது.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரு புதிய மாற்று சக்திவலுப்பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அரசின் போக்கை கூர்ந்து ஆராய்ந்து, ஒரு புதிய அரசியல் பாதையை நோக்கிச் செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam