பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் திட்டம்
கடந்த ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு திறன் ஒத்துழைப்பு நலன் திட்டம் எனும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை ஊழியர் சேமலாபா நிதியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய தொழில் தகைமை (NVQ) மட்டம் 3, 4 மற்றும் 5 அங்கீகாரமுள்ள தெரிவுசெய்யப்பட்ட 100 பாடநெறிகளில் ஒரு பாட நெறிக்கு மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடாத்தப்படும் உயர்கல்வி திட்டத்திற்கு ரூபாய் 50000 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் விண்ணப்பம்
குறித்த புலமைப்பரிசிலின் விண்ணப்பத்தினை தகுதியுடையவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 16ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |