பிரதேச சபை உறுப்பினர்கள் கொடுப்பனவுகளை தியாகம் செய்ய தீர்மானம்

Ampara Sri Lanka
By Siva Thileep May 27, 2022 11:26 AM GMT
Report

நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை, எமது சபையின் காலம் நிறைவடையும் வரை மாதம் எமக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை ஒரு நிவாரணமாக அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு ஏகமனதான ஒரு முடிவினை எடுத்துள்ளோம். இந்த விடயத்தை பிரதமருக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம்  என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான மே மாதத்திற்காக 4 ஆவது சபையின் 50 ஆவது கூட்ட அமர்வு நேற்று (26)சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தீர்மானம் எடுப்பதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவு மேற்கொண்டனர்.

முதலில் இக்கூட்ட அமர்வு மத அனுஸ்டானத்துடன் இடம்பெற்றதுடன் 2022 ஏப்ரல் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2022 ஏப்ரல் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் இடம்பெற்ற போது தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் உரை இடம்பெற்றது.

பிரதேச சபை உறுப்பினர்கள் கொடுப்பனவுகளை தியாகம் செய்ய தீர்மானம் | Nintavur Pradeshiya Sabha Members Decision Salary

கொடுப்பனவுகளை ஒரு நிவாரணமாக அரசுக்கு வழங்குவதற்கு தீர்மானம்

இவ்வுரையின் போது எரிபொருள் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை எமது சபையின் காலம் நிறைவடையும் வரை மாதம் எமக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை ஒரு நிவாரணமாக அரசுக்கு வழங்குவதற்கு ஏகமனதான ஒரு முடிவினை எடுத்துள்ளோம் என கூறினார்.

பொருளாதார பிரச்சினை, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம், உள்ளிட்ட காரணங்கள் மக்களிற்கு ஆதரவாக சபை அமர்வின் போது தவிசாளர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 06 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி 06 உறுப்பினர்கள் 01 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளருமான வை.எல்.சுலைமாலெப்பையும் இணைந்து தவிசாளரின் முடிவிற்கு ஏகமனதாக ஆதரவினை தெரிவித்து தமது மாதாந்த கொடுப்பனவினை நாட்டின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படும் வரை தியாகம் செய்வதாக தீர்மானம் மேற்கொண்டனர்.

பிரதேச சபை உறுப்பினர்கள் கொடுப்பனவுகளை தியாகம் செய்ய தீர்மானம் | Nintavur Pradeshiya Sabha Members Decision Salary

அத்துடன் இந்த நாட்டில் உள்ள இந்நெருக்கடி தீர்க்கப்படும் வரை பிரதமர் அவர்கள் ஏனைய அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் அதில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களின் கொடுப்பனவினையும் எம்மை முன்னுதாரணமாக கொண்டு செயற்படுத்த ஆவண செய்ய வேண்டும் என  எம்.ஏ.எம் தாஹீர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சபை அமர்வில் கடிதங்கள் பிற விடயங்கள் ஆராயப்பட்டு சபை நடவடிக்கைகள் யாவும் நிறைவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபை உறுப்பினர்கள் கொடுப்பனவுகளை தியாகம் செய்ய தீர்மானம் | Nintavur Pradeshiya Sabha Members Decision Salary

பிரதேச சபை உறுப்பினர்கள் கொடுப்பனவுகளை தியாகம் செய்ய தீர்மானம் | Nintavur Pradeshiya Sabha Members Decision Salary

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US