கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டவர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கிரெஸ்கட் மோனார்க் (Crescat Monarch) சொகுசு குடியிருப்பு வளாகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமைக்காக நேற்று இரவு இரண்டு வெளிநாட்டவர் உட்பட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த வளாகத்தின் கூரையின் உச்சியில் உள்ள நீச்சல் குளம் அருகே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்து நடத்தப்பட்டுள்ளது.
விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 நிமிடங்கள் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
