வவுனியாவில் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைது
வவுனியா, பொன்னாவரசன்குளம் ஆலய வருடாந்த திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பொன்னாவரசன்குளம் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் கொடி இறக்கத்திற்கான பூசைகள் நேற்று (09.09) காலை இடம்பெற்ற போது அங்கு வந்த ஒரு குழுவினருக்கும், ஆலயத்தில் இருந்தவர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றது.
நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் மோதல் காரணமாக உடனடியாக மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவர் காயம் காரணமாக மதியமளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நான்கு பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் உட்பட 20 இற்கு மேற்பட்டவர்கள் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அவர்களில்
குறித்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைது
செய்யபப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிரார் மேலும்
தெரிவித்தனர்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan