சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்ட ஒன்பது இந்திய கடற்தொழிலாளர்கள் கைது : இழுவை படகு ஒன்றும் மீட்பு
சர்வதேச கடல் எல்லைக் கோடு (IMBL) வழியாக முல்லைத்தீவுக்கு அப்பால் இலங்கையின் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்ட 09 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர், நேற்று வடக்கின் தீவுக் கடற்பரப்பில், அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவை படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போதே முல்லைத்தீவுக்கு அப்பால் இலங்கையின் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்ட 09 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்திய இழுவை படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரின் ரோந்துப் பணி

வெளிநாட்டு கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கவும்,
உள்நாட்டு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் கடற்படையினர்
தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய இழுவை படகுடன் 09 இந்திய கடற்தொழிலாளர்கள், திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதேவேளை, நாட்டின் கடற்றொழில் வளங்களையும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக வழக்கமான நடவடிக்கைகளை தொடந்தும் மேற்கொள்ளவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
| கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு தொடருந்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        