கொழும்பில் ஒன்பது வெளிநாட்டினர் கைது!
கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஒன்பது வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
நைஜீரியாவைச் சேர்ந்த மூவர், மாலைதீவைச் சேர்ந்த நால்வர் மற்றும் இந்தியர்கள் இருவரே இவ்வாறு கல்கிஸை, மொரட்டுவை, தெஹிவளை, கிராண்ட்பாஸ், கொம்பனித் தெரு ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த நைஜீரியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், சமூக ஊடகங்கள், இணையம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு தீங்கிழைக்கும் வகையிலான பல்வேறு குற்றச்சாட்டுக்காகவே கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் பொலிஸாரால் இதுபோன்ற விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
