சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நிலாவெளி சுற்றுலாத் துறை சிரமதானம்
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் நிலாவெளி புறா தீவு சுற்றுலா கடற்கரை பிரதேசம் இன்று (02)சுத்தம் செய்யப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தலைமையில் இடம் பெற்ற குறித்த சுத்தப்படுத்தும் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜீ.எம்.ஹேமந்த குமார,குச்சவெளி பிரதேச செயலாளர் உட்பட சுற்றுலாத் துறை பணியக தலைவர், முப்படைகளின் அதிகாரிகள், சுற்றுலாத் துறை சங்கங்கள் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் அதிகளவான சுற்றுலாத் துறை பயணிகளை கவரும் புறாத் தீவு மற்றும் அதனை அண்டிய கரையோர பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது. கடலுக்கடியில் மற்றும் வெளிப்புறம் என பொலித்தீன் பிளாஸ்டிக் உள்ளிட்ட சுற்றுச் சூழலை பாதிக்கும் பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டது.
அழகான சுற்றுலா தளம்
இதன் மூலம் சிறந்ததொரு சுற்றுச் சூழலை உருவாக்கவும் அழகான சுற்றுலா தளமாக குறித்த பகுதிகளை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






