ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதில் இருந்து தாம் தடுக்கப்படவில்லை!
ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கட்சி தனக்கு அறிவுறுத்தவில்லை என்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவோ அல்லது கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்கவோ ஊடகங்களுடன் பேசுவதை நிறுத்துமாறு தன்னை வற்புறுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
வெளியான தகவல்
அத்துடன், ஊடகங்களுடன் பேசுவதா இல்லையா என்பது தனது முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் தொழில் ரீதியாக ஒரு ஊடக ஆளுமை கொண்டுள்ளேன் என்றும், ஊடகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் நிலந்தி கோட்டஹச்சி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஊடகங்களிடம் கருத்து தெரிவிப்பதில் இருந்து தாம் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் என்ற தகவல் வெளியானமை தொடர்பிலேயே அவர் இந்த மறுப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |