கரீபியன் நாடொன்றில் ஏற்பட்ட பாரிய விபத்து: நூற்றிற்கு மேற்பட்டோர் பலி
டொமினிகன் நாட்டின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 113 பேர் கொல்லப்பட்டதுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அந்நாட்டு இரவு விடுதி ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றின் போது இடம்பெற்றுள்ளது.
இடிந்து விழுந்த கூரை
நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்திற்குள் இருந்துள்ள நிலையில் சுமார் 400 மீட்புப் பணியாளர்கள் இன்னும் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்ற நிலையில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Sad news here..
— Chris from Massachusetts AKA TommyboyTrader (@autumnsdad1) April 9, 2025
At least 98 people have been killed and more than 150 injured after a roof collapsed at Jet Set nightclub in the Dominican Republic's capital ..
Singer Rubby Pérez Ex-MLB players Octavio Dotel, Tony Blanco are among the dead..prayers up🙏
pic.twitter.com/4L9JCwUxjd
முன்னதாக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 113ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அதேவேளை, இது வரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
For those who do not know, yesterday in a nightclub called Jet Set there was a concert of the renowned artist Rubby Perez, may he rest in peace, where the roof of the place collapsed causing the terrible tragedy. Many people have been killed (113 people currently) and the… pic.twitter.com/ABaaxMV9XD
— 𓄼 𝐤𝐢𝐦𝐛𝐲𝐲𝐲 ➷。. (@justxkimby) April 9, 2025
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |