விசா இன்றி தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது
விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டு பிரஜையை மிரிஹான பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த நபர் நேற்று மதியம் கங்கொடவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கங்கொடவில பிரதேசத்தில் வீடொன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 40 வயதான நைஜீரிய பிரஜையிடம் இருந்து மடிக்கணனி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர் ஏதேனும் குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri