நாசாவின் அறிவியல் துறை தலைவராக முதன்முறையாக பெண் ஒருவர் நியமனம்
நாசாவின் அறிவியல் துறை தலைவராக முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல வாரங்களாக குறித்த நியமனம் தொடர்பில் வதந்திகள் வெளியானதாகவும் ஆனால் இன்று நாசா அவற்றை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிறந்த திட்டங்களை மேற்பார்வை செய்யும் பிரிவு
இதனூடாக நாசாவால் நியமிக்கப்பட்ட முதல் பெண் ‘அறிவியல் தலைவர்’ என்ற பெருமையை நிக்கோலா ஃபாக்ஸ் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
நாசாவின் அறிவியல் துறையானது சுமார் 7 பில்லியன் டொலர் வருடாந்த பட்ஜெட்டை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் துறை என்பது நாசா நிறுவனத்தின் சிறந்த திட்டங்களை மேற்பார்வை செய்யும் பிரிவு எனவும் 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாசா ஆய்வு குழுவையும் நிக்கோலா ஃபாக்ஸ் கண்காணிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செவ்வாய் கிரகத்தில் முந்தைய வாழ்க்கையின் அறிகுறிகளைத் தேடும் ரோபோ பயணங்களையும், தொலைதூர விண்மீன் திரள்களைத் தேடும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியையும் அவர் கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனை ஆராய்ந்த பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டத்தில் நிக்கோலா ஃபாக்ஸ் முன்னணி ஆராய்ச்சியாளராக இருந்தார் எனவும் மிகவும் அனுபவம் வாய்ந்த சூரிய விஞ்ஞானி நாசாவால் அதன் அறிவியல் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
