மூன்று விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது இந்தியாவின் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!
இந்தியா- தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட, விடுதலை புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் மூன்று விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
குறித்த குற்றப்பத்திரிக்கையை இந்திய தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ), நேற்று முன்தினம் (11.11.2022) தாக்கல் செய்துள்ளது.
இந்திய புலனாய்வு பிரிவு உறுதி
தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட - நவீன் என்கிற சக்கரவர்த்தி எம், சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று என்ஐஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கடந்த மே 19 அன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள புளியம்பட்டி பிரிவு அருகே வாகனச் சோதனையின் போது, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப் சன்னங்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் விடுதலைப் புலிகளுடன் தம்மை இணைத்துக்கொண்டனர்
என்பதும், ‘உலகத் தமிழ் நீதிமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியதும் விசாரணைகள்
மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri