இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதர் யார்..! வெளியான தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 16, 2026 அன்று, இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சங் பதவிக் காலத்தை முடிந்ததை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தூதர் நியமனம்
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக கருதப்படும் எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பது மற்றும் செயல்படுத்துவது ஆகிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

அதிலும் குறிப்பாக, அந்தப் பிராந்தியத்திற்கான பணியக செயல்பாடுகளை மேற்பார்வையிடும் முக்கிய பொறுப்பும் அவரிடம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தில், அமெரிக்க அரசின் தூதரக நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்த நிலையில், எரிக் மேயர் இலங்கைக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படின், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்திய அரசியல் தொடர்புகளில் புதிய நகர்வுகள் ஏற்படக்கூடும் என அரசியல் மற்றும் தூதரக வட்டாரங்கள் கருதுகின்றன.
கடந்த 2022 முதல் ஜனவரி 16, 2026 அன்று வரை இலங்கைக்கான அமெரிக்க தூதராக கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஜூலி சங் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam