இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும்: வசந்த பண்டார எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். மேலும், இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும் என தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
"கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் என்பதே முதலாவது போராட்டத்தின் இலக்காக இருந்தது.
இதில் "கோட்டா கோ ஹோம்" என்பது மட்டுமே வெளியில் தெரிந்தது. "ரணில் கம் பெக்" என்பது திரைமறைவில் இடம்பெற்று வந்தது.
2ஆவது போராட்டம் "ரணில் கோ ஹோம்" என வராது. அது வேறு வடிவில் வரும். அதாவது, ரணில் ஆட்சியில் இருக்கும்போது வர்க்க வேறுபாட்டால் ஏற்படும் போராட்டமாக அது அமையும்.” என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு…
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




