ஆறு மாதங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு இலங்கைக்கு முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர் சுலைமான் நிஷ்தார் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் இலங்கை அதன் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் நிலையில் முதல் பாதி முக்கியமான காலகட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஏற்படும் புவிசார் அரசியல் மாற்றங்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தொழில்களை ஊக்குவிப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வர்த்தகம்
“தொழில்கள் விநியோக சங்கிலி மற்றும் வழிகளை பல்வகைப்படுத்தும் புவிசார் அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் நாம் சரியான நேரத்தில் இருக்கிறோம்.

கவர்ச்சிகரமானதாக தோன்றவும், நமது மதிப்பிற்கான யோசகளை முன்வைக்கவும் இது ஒரு சரியான நேரம்,” என Ernst & Young Partner Tax தலைமை அதிகாரி சுலைமான் நிஷ்தார் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆறு மாதங்கள் நாம் ஈர்க்க வேண்டியவை மற்றும் நாம் முதலீடு செய்ய வேண்டியவை ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியமானதாக இருக்கும். நாம் அதிக பொது தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan