மருத்துநீர் வைத்து ஆலய வழிபாடு செய்யும்போது தோசங்கள் நீங்கி சிறப்புறவாழ முடியும்! - சிவஸ்ரீ ஆதிசௌந்ததரராஜ குருக்கள்
தலையில் விளா இலையும், பாதத்தில் கடம்ப இலையும் வைத்து மருத்துநீர் வைத்து ஆலய வழிபாடுகள் செய்யும்போது தோசங்கள் நீங்கிச் சிறப்புற வாழமுடியும் என ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ஆதிசௌந்ததரராஜ குருக்கள் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மருத்துநீர் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிறக்கவிருக்கும் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டின் சிறப்பாகக் கருதப்படும் மருத்து நீர் வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆலயங்களில் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று மாலை மருத்துநீர் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெருமளவானோர் இன்று மாலை முதல் மருத்துநீர் பெற்றுச்செல்வதைக் காணமுடிகின்றது. இன்று இரவு 9.30மணி தொடக்கம் அதிகாலை 5.30மணி வரையில் மருத்துநீர் தோய்ந்து நீராடும் புண்ணியகாலமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து கொண்டாடுவதன் காரணமாக பிலவ வருடம்
பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.









முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
