அதிகாரியை துாக்கியெறிந்து, பிரச்சினையை தீர்க்க முயலும் அரசாங்கம்
விவசாய அமைச்சகத்தின் செயலாளரை பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் தற்போதைய விவசாயத்துறை வீழ்ச்சிக்கு அரசாங்கத்தினால் தீர்வை வழங்கமுடியாது என்று எதிர்கட்சி குறிப்பிட்டுள்ளது
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி் கவிரட்ன, இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம், இரசாயன பசளைகளின் இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் காரணமாக விவசாயத்துறையில் 75 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கருத்துரைத்த நிலையிலேயே விவசாயத்துறை அமைச்சகத்தின் செயலாளர் உதித் கே ஜயசிங்க பதவி நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதித் ஜெயசிங்க மற்றும் அதிகாரிகள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ரோஹினி கவிரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்
சீனாவின் சேதனப்பசளையை இலங்கையின் அதிகாரிகள் நிராகரிக்கத்ததை அடுத்து, இந்திய சந்தையில் இருந்ததை விட மிக அதிக விலையில் இந்தியாவில் இருந்து திரவ நனோ யூரியாவை பேராசிரியர் ஜெயசிங்க இறக்குமதி செய்தமைக்கு உதித் ஜெயசிங்கவே காரணம் என்ற ரோஹினி கவிரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்
இதேவேளை விவசாய இரசாயனங்கள் மீதான தடை நீக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் அவை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
இந்தநிலையில் எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பதவி விலக்கப்பட்ட உதித் ஜெயசிங்க, விவசாயத்துறையின் வீழ்ச்சிக்கு தாம் பொறுப்பல்ல என்று குறிப்பிட்டார்

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
